இலங்கையினுள் அத்துமீறி புகுந்த இந்தியர்கள் 6 பேர் கைது!!!

இலங்கையினுள் அத்துமீறி புகுந்த இந்தியர்கள் 6 பேர் கைது!!!

யாழ்ப்பாணம் - குறிகாட்டுவான் பகுதியில் வீசா அனுமதி அற்ற 6 இந்திய பிரஜைகள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா - தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக பரவிவரும் நிலையில், பீதியில் ஏராளமான இந்திய தமிழ் மக்கள் அகதிகளாக அங்கிருக்கும் படகு உரிமையாளர்கள் அதிகமான பணம் வசூலித்து இலங்கைக்கு படகு மூலம் நாடு கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து போலீசார் மேற்கொண்ட தீவிர தேடலின் போதே குறித்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

குறித்த ஆறு பேரையும் விசாரணைக்கு உட்படுத்திய போலீசார், தாங்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள டெல்ஃப்ட் தீவுக்கு ஓர் கட்டிட நிர்மாண கூலி வேலைக்காக வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான உண்மை நிலைப்பாட்டை அறிய டெல்ஃப்ட் தீவின் போலீசாருடன் தொடர்பு கொண்டு குறிகாட்டுவான் போலீசார் இச்சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளனர்.

இருந்தபோதிலும், வீசா மற்றும் வேறு எந்தவித ஆவணங்களும் இன்றி படகுகளின் மூலம் இலங்கைக்கு நாடு கடத்தப்படும் இடமான  குறிகாட்டுவான் பகுதியில் இவர்கள் இருந்தமை தொடர்பின் பொலிஸாருக்கு  மிகுந்த சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க குறிகாட்டுவான் போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post