ஸூம் (ZOOM) இற்கு ஆப்பு - முடக்க வலியுறுத்தியது சீனாஸூம் என்ற செயலியில் நடத்தப்படுவதாகத் திட்டமிடப்பட்டிருந்த கூட்டங்களையும் அதை நடத்த திட்டமிட்டிருந்தோரின்கணக்குகளையும் ஸூம் ஆப் சீனாவின் வற்புறுத்தலுக்கு இணங்க முடக்கியது.

இது குறித்து ஸூம் செயலி நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு:


1989-ம் ஆண்டு பீஜிங்கின் தியானமென் சதுக்கத்தில் நடந்த போராட்டத்தின் நினைவு தினம், இந்த மாதத் தொடக்கத்தில்அனுசரிக்கப்பட்டது. சீன அரசுக்கு எதிராக சிலர் ஸூம் செயலியில் சில கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.

இந்தத் தகவல்களை அறிந்த சீன அரசு எங்களிடம் அந்தக் கூட்டங்களை நடத்தக் கூடாது என்றும் அதை நடத்தத் திட்டமிட்டோரின்கணக்குகளையும் முடக்க வலியுறுத்தியது. அவர்கள் சீனாவில் இல்லாவிட்டாலும் அவர்கள் கணக்கை முடக்க அறிவுறுத்தியது.

இதனையடுத்து அவர்களின் கணக்குகள் முடக்கப்பட்டன. எனினும் முடக்கப்பட்ட கணக்குகளை பயன்படுத்த தற்போது அவர்கள்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சீன அரசுக்கு எதிராக நடக்கும் ஆன்லைன் கூட்டங்களை மட்டுமே எங்களால் தடுக்க முடியும். சீனாவில் ட்விட்டர், முகநூல் உள்ளிட்டசமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் ஸூம் செயலிக்கு இன்னும் தடை விதிக்கப்படவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post