ஜனாதிபதியுடன் இணையவிருக்கும் சஜித் பிரேமதாச!!

எதிர்வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுடன் இணைந்து பணியாற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தயாராக உள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ தெரிவிக்கையில், சஜித் பிரேமதாச மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணைந்து செயல்பட்டால் ஒழுக்கமான சமூகத்தை உருவாக்க முடியும் என்று தெரிவித்தார்.


தற்போதைய அரசாங்கத்தின் சில செயற்பாடுகள் ஜனாதிபதிக்கு தனது கொள்கைகளை முன்னோக்கி எடுத்துச் செல்ல இயலாமல் இருப்பதாக தான் சந்தேகிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

அவர் தனது சொந்தக்காலில் நின்று, அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கொள்கைகளை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post