லாக்டவுனில் இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் டாப் 10 வீரர்கள் பட்டியலில் விராட் கோலி!

லாக்டவுனில் இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் டாப் 10 வீரர்கள் பட்டியலில் விராட் கோலி!

லாக்டவுனில் இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதித்த வீரர்கள் பட்டியிலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 6-வது இடத்தில்உள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளனர். குறிப்பாக இன்ஸ்டாகிராமில்நேரலையில் ரசிகர்களுடன் பேசுவது, சக கிரிக்கெட் வீரர்களுடன் கலந்துரையாடுவது தற்போது அதிகமாகி உள்ளது.

பிரபலங்கள் பலர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்பான்சர் நிறுவனங்களின் பதிவுகளை பதிவிட குறிப்பிட்ட தொகை வசூலிப்பதுவழக்கம். அவ்வாறு லாக்டவுன் நேரத்தில் (மார்ச் 12-ம் தேதி முதல் மே-14 வரை) விளையாட்டு வீரர்கள் எவ்வளவு சம்பாதித்துஉள்ளார்கள் என்ற ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் டாப் 10-ல் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இடம்பெற்றுள்ளார். கோலி 3 ஸ்பான்சர்கள் பதிவின் மூலமாக 3 கோடியே 60 லட்சம் சம்பாதித்துள்ளார். கோலியை இன்ஸ்டாகிராமில் சுமார் 6 கோடியே 21 லட்சம் பேர் ஃபாலோ செய்கின்றனர்.

போர்சுகல் கால்பந்து அணயின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்ஸ்டாகிராம் மூலம் 18 கோடி ரூபாய் சம்பாதித்துமுதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி(ரூ.12.5 கோடி) 2-வது இடத்திலும் பிரேசில்கால்பந்து வீரர் நெய்மர் (ரூ.11.5 கோடி)3வது இடத்திலும் உள்ளனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post