பல கோடி ரூபாக்கள் செலவாகிய PCR பரிசோதனைகள் - அமைச்சர் பவித்ரா

பல கோடி ரூபாக்கள் செலவாகிய PCR பரிசோதனைகள் - அமைச்சர் பவித்ரா

இலங்கையில் PCR பரிசோதனைக்காக மாத்திரம் அரசாங்கம் இதுவரையில் 65 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தைசெலவிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார். நாட்டில் இதுவரையில் ஒரு லட்சத்திற்கும்அதிகமான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


அந்த பரிசோதனைகள் மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலகளாவிய ரீதியில் கொரோனா நோயாளிகளைஅடையாளம் காண பயன்படுத்தும் மிகவும் வெற்றிகரமான முறை இதுவாகும். இலங்கையில் PCR பரிசோதனை மேற்கொள்வதற்காகநபர் ஒருவருக்கு 6500 ரூபா செலவிடப்பட்டுள்ளது. கிழக்கு கொழும்பு வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரிவில் நாள்ஒன்றுக்குள் 500 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நாடு முழுவதும் தேவையான இடங்களில் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post