இந்தியாவில் அடுத்த சோகம்: இடி-மின்னல் தாக்கி 83 பேர் பலி!

இந்தியாவில் அடுத்த சோகம்: இடி-மின்னல் தாக்கி 83 பேர் பலி!

இந்தியாவில் பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றும் வீசி வருவதால் பல்வேறு இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள்சாய்ந்துள்ளன. இதன் காரணமாக குடிநீர் சப்ளை, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பீகாரில் இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில் 83 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலாரூ.4 லட்சம் இழப்பீடு வழங்குவதாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.


உயிரிழந்த 83 பேரில் கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர். நவாடாவில் 8 பேரும், சிவான் மற்றும் பாகல்பூரில்தலா 6 பேரும் தர்பங்கா மற்றும் பாங்காவில் தலா 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) பீகார் மாநிலத்தின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்தது. மேலும் இன்றும்நாளையும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post