கண்டி நகரில் குழப்ப நிலை -முழு விபரம்

கண்டியில் பிரதான தபால் நிலையத்திற்கு முன்னால் முச்சக்கர வண்டிகள் நிறுத்துவது தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தகராறு பாரியமோதல் நிலையாக மாறியுள்ளது. தற்போது கண்டி குட்ஷேட் பேருந்து நிறுத்துமிடத்தில் அபிவிருத்தி நடவடிக்கைமுன்னெடுக்கப்படுகின்றன.


அந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிகள் , கண்டி பிரதான தபால் நிலையத்திற்கு முன்னால் நிறுத்தஅனுமதிக்கப்பட்டுள்ளது . இதனால் இந்த மோதல் நிலை அதிகரித்து சாரதிகளுக்கு இடையில் அடிதடிகள் ஏற்பட்டுள்ளன. அடிதடிகள்காரணமாக குறித்த இடத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து கண்டி பொலிஸ் அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்று நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுதொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் முச்சக்கர வண்டியை நிறுத்த முயன்றமையினால் இந்த மோதல் சம்பவம்ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
Previous Post Next Post