ஈரான் ராணுவத் தளபதி சுலைமானி கொலை: உளவாளிக்கு மரண தண்டனை- ஈரான் அறிவிப்பு

ஈரான் ராணுவத் தளபதி சுலைமானி கொலை: உளவாளிக்கு மரண தண்டனை- ஈரான் அறிவிப்பு

ஈராக்கில் அமெரிக்கப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட ஈரான் படைத்தளபதி சுலைமானி கொலை சம்பவத்தில் அமெரிக்காவின்மொசாட்டுக்கு உளவாளியாக செயல்பட்டவருக்கு ஈரான் மரண தண்டனை அறிவித்துள்ளது.

ஈரான் நாட்டின் இராக்கில் ஐஎஸ் உள்ளிட்ட தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த குர்து படை கமாண்டர் குவாசிம்சுலைமானி கடந்த ஜனவரி மாதம் 3ம் தேதி ட்ரோன் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார்.

அமெரிக்க அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் அவர் பலியானார். இது ஈரான் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதயைடுத்து, சுலைமானி கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா தகுந்த விலை கொடுக்க நேரிடும் என்று ஈரான் எச்சரித்தது. இதற்கு பழிதீர்க்கும் விதமாகஜனவரி 8 ல் ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானப்படை தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஆனாலும், பெரியஅளவில் சேதம் ஏற்படவில்லை.


இந்நிலையில் குவாசிம் சுலைமானி குறித்து அமெரிக்காவின் சி.ஐ.ஏ., மற்றும் இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டுக்கு முக்கியதகவல்களை கொடுத்ததற்கு மக்முத் மவுசாவி மஜ்த் என்பவரை ஈரான் போலீஸ் கைது செய்தது.

விசாரணையில் சுலைமானி குறித்த தகவல்களை உளவு அமைப்புகளுக்கு அளித்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மக்மூத்மவுசாவி மஜ்த்தை தூக்கிலிட முடிவு செய்திருப்பதாக ஈரான் நாட்டு நீதித்துறை செய்தி தொடர்பாளர் கோலாம்ஹூசைன் இஸ்மாயில்தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post