
ஜூன் மாதம் முதலாம் திகதி அமுல்படுத்தப்படும் பொது மன்னிப்பு காலத்தில் புதிய சட்டம் மூலம் இந்த விசா வழங்கப்படவுள்ளதாகஅமைச்சு குறிப்பிட்டுள்ளது.
8 வருடங்களின் பின்னர் செயற்படுத்தப்படும் இந்த பொது மன்னிப்பு கால சட்டம் மூலம், விவசாயம், மீன்பிடி, வீட்டு பணி சேவை மற்றும்மேலும் சில பிரிவுகளின் ஊழியர்களுக்கு சேவை யோசனை ஊடாக தொழில் ஒப்பந்த செய்துக் கொள்வதன் மூலம் இந்த விசா அனுமதிகிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரையிலான 45 நாட்களுக்குள் இந்த விசா அனுமதிக்கு விண்ணப்பிக்கவேண்டும் என இத்தாலிய உள் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இத்தாலியில் முன்னெடுக்கவுள்ள இந்த நடவடிக்கையின் கீழ் அந்தநாட்டில் விசா இன்றி வசிக்கும் இலங்கையர்கள் 15 ஆயிரம் பேருக்கு விசா கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாலியில்உள்ள சட்டவிரோத இலங்கையர்களுக்கு புதிய விமான அனுமதி பத்திரம் பெறுவதற்காக இத்தாலி நகரத்தில் உள்ள இலங்கை தூரகம்மற்றும் மிலான் நகர உயர் ஸ்தானிகரலாயத்தில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விமான அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்வதற்கு அவசிய ஆலோசனைகளை தூதரக இணையத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இத்தாலியின் பணியாற்றும்இலங்கை தூதுவர் சிசிர சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நிலவும் நிலைமைக்கமைய விமான அனுமதி பத்திரம் விண்ணப்பிக்கும் போது ஜுன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னரான தினம் மற்றும்நேரத்தை ஒதுக்கிக் கொள்வதற்கு அவசியமான ஆவணங்களை தூதரக அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். ஆவணங்களைஒப்படைத்த நாள் முதல் குறைந்தது 10 நாட்களுக்குள் விசா விண்ணப்பித்தவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தூதரகஅலுவலகம் தெரிவித்துள்ளது.