வென்டிலேட்டர் பிளக்கை கழற்றியதால் மருத்துவமனையில் கொரோனா நோயாளி பலி!

வென்டிலேட்டர் பிளக்கை கழற்றியதால் மருத்துவமனையில் கொரோனா நோயாளி பலி!

ராஜஸ்தானின் கோட்டா மருத்துவமனையில், ஏர் கூலரை பயன்படுத்த, தவறுதலாக வென்டிலேட்டர் பிளக்கை கழற்றியதால்கொரோனா பாதித்த 40 வயதான நோயாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து கூடிக்கொண்டே செல்கிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த ஒவ்வொருமாநிலங்களும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ராஜஸ்தானிலும் நோய் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. ராஜஸ்தானில் உள்ள கோட்டா மருத்துவமனையில் கடந்த வாரம் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மகாராவ் பீம் சிங் என்பவர்அனுமதிக்கப்பட்டார். பாதுகாப்பு நடவடிக்கையே தொடர்ந்து, ஐசியுவில் மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.


நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர், மருத்துவமனை வளாகத்தில் சற்று வெப்பமாக இருந்ததால் தனிமை வார்டில் ஏர் கூலரைவாங்கியிருந்தார். இதனால் அந்த ஏர் கூலரைப் பயன்படுத்த, குடும்ப உறுப்பினர்கள் தவறுதலாக வென்டிலேட்டர் பிளக்கைஅவிழ்த்தனர். சில நிமிடங்களுக்குப் பிறகு, வென்டிலேட்டர் மின்சாரம் இல்லாமல் ஓடியது.

வென்டிலேட்டரின் இயக்கத்தில் கோளாறு ஏற்பட்டு 40 வயதான அந்நோயாளி சுவாச பிரச்னையால் திணறினார். பின் சிலநிமிடங்களிலேயே இறந்து விட்டார். மருத்துவமனையில் வென்டிலேட்டரில் சிக்கல் ஏற்பட்டதாக 40 நிமிடங்கள் கழித்து தான்மருத்துவமனை ஊழியர்கள் வந்தனர். இந்த சம்பவம் குறித்து துணை கண்காணிப்பாளர், நர்சிங் கண்காணிப்பாளர் மற்றும்கடமையில்உள்ள தலைமை மருத்துவ அதிகாரி ஆகியோர் அடங்கிய குழு இந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றுமருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் நவீன் சக்சேனா தெரிவித்தார். நோயாளியின் மரணம் குறித்து தகுந்த நடவடிக்கைஎடுக்கப்படும் என தெரிவித்தனர்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post