பொலிஸ் நிலையத்தின் மதிலை உடைத்து உள்ளே சென்று விபத்துக்குள்ளான லொரி!!!

இன்று (15) அதிகாலை 04 மணியளவில் கடுகஸ்தோட்டையிலிருந்து பேராதெனிய நோக்கி சென்று கொண்டிருந்த லொரிவண்டியொன்று கண்டி பொலிஸ் நிலைய மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


பொலிஸ் அதிகாரிகளின் உதவியினால் லொரி வண்டியினுள் இருந்த சாரதி மற்றும் உதவியாளரை ஒரு மணி நேரத்திற்கு பின்னர்வெளியில் எடுக்கப்பட்டதுடன் வாகன சாரதி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயங்களுடன் வாகன உதவியாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரானைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Previous Post Next Post