கொரோனாவுக்கு பலியான முதல் ஜனாதிபதி!

புருண்டி (Burundi) ஜனாதிபதி கொரோனாவால் பலியான தகவலை அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

ஜனாதிபதி Pierre Nkurunziza மாரடைப்பால் தான் மரணமடைந்துள்ளார் என அரசாங்க அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மூச்சுத்திணறல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த ஜனாதிபதி Pierre Nkurunziza அதனைத் தொடர்ந்தே மரணமடைந்தார் என Karusi மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

மிகவும் ஆபத்தான நிலையிலேயே ஜனாதிபதி Pierre Nkurunziza மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் எனவும், தங்களால் அவரது உயிரை காப்பாற்ற முடியாமல் போனது எனவும் Karusi மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி Pierre Nkurunziza மறைவுக்கு ஒரு வார காலம் துக்கம் அனுஷ்டிக்கப்படும் எனவும், இறுதிச்சடங்குகள் தொடர்பான திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகில் கொரோனாவுக்கு பலியாகும் முதல் உலகத் தலைவர் புருண்டி ஜனாதிபதி Pierre Nkurunziza என தகவல் வெளியாகியுள்ளது.

நீண்ட 15 ஆண்டுகள் கொடுங்கோல் ஆட்சியை மேற்கொண்ட ஜனாதிபதி Pierre Nkurunziza எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் தமது பதவியை துறக்க இருந்தார்.

தற்போது அவர் மரணமடைந்த நிலையில், புருண்டி அரசியலமைப்பு நீதிமன்றம் Evariste Ndayishimiye என்பவரை ஜனாதிபதியாக பொறுப்பேற்க அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post