120 வயது தாயை கட்டிலில் வைத்து வங்கிக்கு இழுத்துச் சென்ற 70 வயது மகள்! (வீடியோ இணைப்பு)

advertise here on top
Join YazhNews WhatsApp Community

120 வயது தாயை கட்டிலில் வைத்து வங்கிக்கு இழுத்துச் சென்ற 70 வயது மகள்! (வீடியோ இணைப்பு)

நூறு வயது கடந்த தாயின் ஊதியப் பணத்தைப் பெறுவதற்கு அவர் நேரில் வங்கிக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவரை 70 வயது மகள் கட்டிலில் வைத்து இழுத்து வங்கிக்கு அழைத்துச் சென்ற சம்பவம் ஒன்று இந்தியாவின் ஒடீசா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

நுவாபாடா மாவட்டத்தின் பராகன் கிராமத்தைதச் சேர்ந்த லாபே பாகல் எனும் மூதாட்டியையே அவரின் மகள் கட்டிலில் வைத்து இழுத்துச் சென்றார்.

லாபே பாகல் (Labhe Baghel)  120 வயதானவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 1500 ரூபா பணத்தை வங்கியிலிருந்து மீளப் பெறுவதற்கு அவர் நேரில் வர வேண்டும் என வங்கி அதிகாரிகள் கூறினராம்.

அதனால், 70 வயதான அவரின மகள் குன்ஜா தேய் ( Gunja Dei ) வேறு வழியின்றி தனது தாய் படுத்திருந்த கட்டிலை வங்கியை நோக்கி இழுத்துச் சென்று சுமார் 400 மீற்றர் தூரத்திலுள்ள வங்கியை அடைந்தார். இக்காட்சி வீடியோவிலும் பதிவாகியுள்ளது.

இப்பெண்கள் வங்கியை அடைந்தவுடன் அவர்களின் நிலையைப் பார்த்த வங்கி அதிகாரிகள் உடனடியாக லாபே பாகலின் பெண்ணின் பணத்தை வழங்கினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தை அறிந்த பலர் வங்கி அதிகாரிகளை விமர்சித்துள்ளனர்.

மேற்படி வீடியோவைப் பார்த்த உள்ளூர் சட்டசபை உறுப்பினர் ஆதிராஜ் பானிகிராஹி, வங்கி அதிகாரிகளை விமர்சித்ததுடன் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் உத்கல் கிராம்யா வங்கியின் பிராந்திய முகாமையாளர் ஆதிராஜ் பானிகிராஹியுன் தொடர்புகொண்டதுடன் இது குறித்து விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.

மூத்த பிரஜைகளுக்கு வீட்டுக்கே சென்று வங்கிச் சேவைகளை வழங்குமாறு பிராந்திய வங்கிகளின் முகாமையாளர்களுக்கு ஒடிசா பிரதம செயலாளர் கடிதம் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



நன்றி: மெட்ரோ நியூஸ்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.