சுமார் 200 பேருடன் இலங்கை வர இருக்கும் போரா சமூக தலைவர்!

சுமார் 200 பேருடன் இலங்கை வர இருக்கும் போரா சமூக தலைவர்!

Bora
போரா தாவூதி சமூகத்தின் அன்மீகத் தலைவரான கலாநிதி சயித்தினா முபாத்தல் சைபுதீன் (Dr. Syedna Mufaddal Saifuddin) இலங்கைக்கான விஜயமொன்றினை இன்னும் சில நாட்களில் மேற்கொள்ளவுள்ளார்.

இவருடன் குறித்த சமூகத்தினைச் சேர்ந்த 200 பேர் விசேட விமானமொன்றில் இலங்கை வரவுள்ளனர். இதற்கான அனுமதியினை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளது.

இந்தியாவில் கொவிட் 19 இன் பரவல் குறைவடையும் வரை இவர்கள், பண்டாரவளையில் தங்கியிருக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போரா தாவூதி சமூகத்தினரின் விருப்பமான ஒரு நாடாக இலங்கை அண்மைக்காலமாக காணப்படுகின்றது.

கடந்த வருடம் இலங்கையில் இடம்பெற்ற போரா தாவூதி சமூகத்தின் ஆஷரா முபாரக் ஒன்றுகூடலில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post