"19ஆவது திருத்த சட்டத்தை திருத்தவே எமக்கு மூன்றில் இரண்டு தேவை!" -லொஹான் றத்வத்த

"19ஆவது திருத்த சட்டத்தை திருத்தவே எமக்கு மூன்றில் இரண்டு தேவை!" -லொஹான் றத்வத்த

நாட்டில் தற்போதுள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க ஜனாதிபதியும், அரசாங்கமும் அயராது உழைத்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

வெலிகமவில் ஊடகங்கலுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்தார். 

தொடர்ந்தும் பேசிய அவர்,

“தற்போது நாட்டில் செயல்படும் நாடாளுமன்றம் இல்லாததால் சில பிரச்சினைகள் வெளிவந்துள்ளன. எனவே ஒரு முறையான தேர்தலை நடத்துவதன் மூலம் நாடு இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்.

தற்போது நாட்டில் ஒரு வலுவான தலைவர் மற்றும் அரசாங்கம் இருக்கின்றது.

ஆகையினால் தலைவரால் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு நிலையான நாடாளுமன்றத்தை நியமிக்க பொதுமக்களுக்கு கடமை உள்ளது.

நிலையான நாடாளுமன்றத்தை நியமிப்பதன் மூலம் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க முடியும்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் றத்வத்த கூறுகையில்,

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை திருத்துவதற்கு பொது மக்கள் மீண்டும் அதிகாரத்தை தற்போதைய அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்கள் 19ஆவது திருத்தம் மூலம் நீர்த்துப்போக செய்யப்பட்டுள்ளது. எனவே நாட்டை உறுதிப்படுத்த புதிய சட்டங்களை இயற்ற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post