கோட்டாபய ஜனாதிபதியாக இருந்தமையாலேயே இதுவரை 11 பேர் மாத்திரம் இறந்துள்ளனர்! -பந்துல குணவர்தன

கோட்டாபய ஜனாதிபதியாக இருந்தமையாலேயே இதுவரை 11 பேர் மாத்திரம் இறந்துள்ளனர்! -பந்துல குணவர்தன

நாட்டு மக்கள் அனைவரது உயிர்களையும் பாதுகாக்கும் கடமையை சரியாக நிறைவேற்றிய ஆசியாவிலேயே பலமிக்க தலைவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாராஹென்பிட்டியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடன் சுமை, வரிச்சுமை என தாங்க முடியாத துன்பத்தில் இருந்த மக்களுக்கு கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றி காரணமாவே நிவாரணம் கிடைத்தது.

அவரது வெற்றியை நாட்டுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டுமாயின் அவருடன் இணைந்து வேலை செய்யக்கூடிய அரசாங்கம் ஒன்றை தெரிவு செய்ய வேண்டும். இதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு தற்போது கிடைத்துள்ளது.

கோட்டாபய ரகபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னரே நாடு மீண்டும் முன்நோக்கி செல்ல ஆரம்பித்தது, மக்களுக்கு உகந்த அபிவிருத்திகளையே நாங்கள் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவோம்.

நிலையான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததுடன் நாங்கள் நாட்டில் புதிய அபிவிருத்திகளை ஆரம்பிப்போம்.

கடந்த அரசாங்கம் படையினரையும் ராஜபக்ஷவினரையும் வேட்டையாடுவதை மாத்திரமே செய்தது.

வேலை செய்து பழகியவர்களுக்கு வேலை செய்ய தெரிந்த கோட்டாபய பதவிக்கு வந்த பின்னரே கொரோனா வைரஸ் தொற்று பரவியது.

இந்த வைரஸ் காரணமாக உலகில் உள்ள பலமிக்க நாடுகளில் கூட ஆயிரக்கணக்கானவர்கள் இறக்கும் போது, எமது நாட்டில் இதுவரை 11 பேர் மாத்திரமே இறந்துள்ளனர்.

எதிர்வரும் பொதுத் தேர்தல் இலங்கையில் தேர்தல் வரலாற்றை மாற்றியமைக்கும் தேர்தலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post