இன்று இதுவரை 04 பேர் அடையாளம்; மொத்த எண்ணிக்கை 1,928 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 04 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதோடு,மேலும் 24 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இன்று (18) இரவு 9.30 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,928 ஆக அதிகரித்துள்ளதோடு, முற்றாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,421 ஆக காணப்படுகின்றது.

மேலும் குணமடைந்தவர்களில் கடற்படையினர் 08 பேர் உள்ளடங்குகின்றனர்.

தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 496 ஆகும்.
Previous Post Next Post