பொலிஸாரால் விதிக்கப்பட்ட தண்டப்பணத்தை (Spot Fine) செலுத்த கால அவகாசம்!

போக்குவரத்து பொலிஸாரால் பெப்ரவரி 16 அல்லது அதன் பின்னர் வழங்கப்பட்ட, போக்குவரத்து விதிமீறல் தொடர்பான தண்டப்பணத்தை (Spot Fine) செலுத்துவதற்கான சலுகைக்காலம் ஜூன் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தபால் மா அதிபர், ரஞ்சித் ஆரியரத்னவினால் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கடந்த பெப்ரவரி 16 ஆம் திகதிக்கு பின்னர் வழங்கப்பட்ட தண்டப்பணத்தை செலுத்த முடியாதவர்கள், அது தொடர்பான மேலதிக அபராதத்துடன் குறித்த தண்டப் பணத்தை செலுத்து முடியும் என அவர் அறிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள எந்தவொரு தபாலகங்கள் மற்றும் உப தபாலகங்களில் இதற்கான அபராத தொகையை செலுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தியிருந்தமையினால் செலுத்த முடியாமல் போன, போக்குவரத்து விதிமீறல் தொடர்பான தண்டப்பணத்தை எந்தவித மேலதிக தண்டப்பண அறவீடும் இன்றி மே மாதம் 29ஆம் திகதி வரை செலுத்த முடியும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post