3 மாதங்களுக்கு பின் மீண்டும் பயிற்சிகளை ஆரம்பிக்கும் இலங்கை கிரிக்கெட் அணி!

3 மாதங்களுக்கு பின் மீண்டும் பயிற்சிகளை ஆரம்பிக்கும் இலங்கை கிரிக்கெட் அணி!

yazh cricket
இலங்கையை சேர்ந்த 13 தேசிய விளையாட்டு வீரர்களை கொண்ட குழுவினர் 12 நாள் பயிற்சி முகாம் ஒன்றில் இணைந்து பயிற்சியினை பெறுவர் என ஸ்ரீலங்கா கிரிக்கட் தெரிவித்துள்ளது.

இந்த பயிற்சி முகாம் நாளை (01) ஆரம்பமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆரம்ப பயிற்சிகள் பந்து வீசும் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கிரிக்கட் கழகத்தில் தமது பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வீரர்கள் பயிற்சி காலத்தில் விருந்தகங்களில் தங்க வைக்கப்படுவர்.

வீரர்களின் உடல் தகுதிக்கான பயிற்சியினை தொடர்ந்து கள பயிற்சிகள் ஆரமப்பிக்கப்படும்.

நான்கு உறுப்பினர்களை கொண்ட குழு பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் உதவு பணியாளர்கள் விளையாட்டு வீரர்களுடன் இணைந்து செயல்படுவர்.

இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவரது உடல் நலன்கள் விளையாட்டு அமைச்சு மற்றும் சுகாதார தரப்பினரது ஆலோசனைக்கு அமைய பேணப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கட் தெரிவித்துள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post