ரோபோட்டுக்களினால் பறிபோன Microsoft நிறுவன ஊடகவிலாளர்களின் தொழில்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரோபோட்டுக்களினால் பறிபோன Microsoft நிறுவன ஊடகவிலாளர்களின் தொழில்!!

robots instead of journalists
முன்னணி தொழிநுட்ப நிறுவனமான Microsoft நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை மாற்ற முடிவு செய்து நூற்றுக்கணக்கான அதன் ஊடகவியலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

செய்தி நிறுவனங்களின் கதைகளை நிர்வகித்தல் மற்றும் MSN தளத்திற்கான தலைப்பு மற்றும் படங்களைத் தேர்ந்தெடுப்பது இதெல்லாம் தற்போது ஊடகவியலாளர்களால் செய்யப்ப்பட்டு வந்தது.

ரோபோக்கள் இப்போது இந்த வேலைகளைச் செய்ய முடியும் என்பதால் அந்த ஊழியர்கள் இனி தேவையில்லை என பணிநீக்கம் செய்ய microsoft முடிவு செய்துள்ளது.

மைக்ரோசாப்ட் அதன் முகப்புப் பக்கங்களில் செய்தி கட்டுரைகளைத் தேர்ந்தெடுப்பதற்கும், திருத்துவதற்கும், நிர்வகிப்பதற்கும் மனிதர்களைப் பயன்படுத்துவதை நிறுத்த முடிவு செய்த பின்னர், ஒரு மாத காலப்பகுதியில் பி.ஏ. மீடியாவால் பணிபுரிந்த சுமார் 27 நபர்கள் எதிர்வரும் நாட்களில் தங்கள் வேலையை இழக்க நேரிடும் என்று கூறப்பட்டது.


ஜூன் மாத இறுதியில் சுமார் 50 ஒப்பந்த அடிப்படையிலான ஊடகவியலாளர்கள் வேலை இழக்க நேரிடும் என்று Seattle Times தெரிவித்துள்ளது. ஆனால் முழு நேர ஊடகவியலாளர்கள் குழு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.