இரு மனைவியர் உட்பட ஐவரை சுட்டுக் கொன்ற நபர்; பாகிஸ்தானில் சம்பவம்!

இரு மனைவியர் உட்பட ஐவரை சுட்டுக் கொன்ற நபர்; பாகிஸ்தானில் சம்பவம்!

பாகிஸ்தானில் கைபர் பக்துன்வா மாகாணத்தில் நபர் ஒருவர், தனது இரு மனைவியர், இரு பிள்ளைகள் மற்றும் மருமகள் உட்பட ஐவரை சுட்டுக் கொலை செய்துள்ளார்.

இக்கொலைகளை நடத்திய நபர், பொலிஸார் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நிலையில் அவரை பொலிஸார் சுட்டுக் கொன்றனர்.

கடந்த வியாழக்கிழமை (28) இரவு குடும்பத்துக்கிடையிலான வாக்குவாதத்தையடுத்து மேற்படி நபர் தனது மனைவியர் இருவர், மகன், மகள் மற்றும் மருமகளை சுட்டுக் கொன்றுள்ளார்.

பின்னர் அவரது வீட்டு பின்புறத்தில் பிணத்தை அடக்கம் செய்ய குழிகளை தோண்டியுள்ளார்.

தகவல் அறிந்த போலீசார் வெள்ளி அதிகாலை அங்கு சென்று மேற்படி நபரை சரணடையுமாறு கூறினர்.

ஆனால், அந்நபர் சரணடைய மறுத்ததுடன் மேலும் நால்வரை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்திருந்ததுடன் பொலிஸார் மீதும் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இதனால் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்தனர் எனவும், அதையடுத்து அவரை பொலிஸார் சுட்டுக் கொன்றனர் எனவும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி நபரால் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கபட்டிருந்தவர்கள் அவரின் மகன், இரு மகள்கள் மற்றும் ஒரு பேரன் எனவும் அவர்கள் நால்வரும் மீட்கப்பட்டனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post