
குறித்த சந்தேக நபர் நேற்று இரவு (30) இரவு 8 மணியளவில் பாணந்துறை, எழுவில பகுதியில் வைத்து STF இனரால் கைது செய்ப்பட்டார்.
மொறட்டுவ, சொய்சாபுர பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மீது கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 12:30 மணியளவில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
சம்பவம் தொடர்பில், ஒரு காரில் வந்த ஒரு குழுவினரால் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு உடனடியாக அங்கிருந்து தப்பி சென்ற காட்சி அங்கிருந்த CCTV காட்சிகளில் பதிவாகியிருந்தது.
மேலும் குறித்த ஹோட்டலில் காவலுக்கு அமர்த்தப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரி பதவி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே 19ஆம் திகதி அன்று ஊரடங்கு அமுலில் இருக்கும் சமயத்தில், அடையாளம் தெரியாத குழுவினரால் குறித்த ஹோட்டலுக்கு வாள்வீச்சு இடம்பெற்றது. பின்னர் 29ஆம் திகதி அன்று அதிகாலை 3 காவல்துறை அதிகாரிகள் பணியில் இருந்தபோது அடையாளம் தெரியாத குழு ஒன்று உணவகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
குறித்த சம்பவம் நடந்து அடுத்த நாளான நேற்றைய தினம் (30) ஹோட்டல் உரிமையாளர் ஒரு ஆடியோ கிளிப்பையும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார், அதில் மே 30ஆம் திகதி காலையில் தாக்குதல் நடத்தியவர் எனக் கூறி தன்னுடன் பேசி, உன்னை விரைவில் கொலை செய்துவிடுவேன் என்றும் காவல்துறையினருக்கு உனக்கு உதவ முடியாது என்று பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை கொலையில் செய்யப்பட்டு, தற்போது பிணையில் இருப்பவர் எனவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

