சட்டத்தரணி அலி சப்ரிக்கு எதிராக சிங்களே அமைப்பு CID இடம் முறைப்பாடு!

சட்டத்தரணி அலி சப்ரிக்கு எதிராக சிங்களே அமைப்பு CID இடம் முறைப்பாடு!

sinhale sri lanka
ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரிக்கு எதிராக CID முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் நெருக்கடி நிலமைகள் உருவாகும் போது இனவாதம் தலைதூக்குவது கவலைக்குறிய விடயம் என ஜனாதிபதி சட்டத்தரணி அல் ஜசீராவுக்கு கூறியதாக குற்றம் சுமத்தி இந்த முறைப்பாட்டினை  சிங்களே அமைப்பின் தேசிய அமைப்பாளர் பிரதீப் சஞ்சீவ இந்த முறைப்பாட்டினை செய்துள்ளார்.

அரசாங்கத்திற்கு நெருக்கமாக இருந்துகொண்டு சர்வதேசத்தில் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வண்ணம் அவர் செயற்பட்டுள்ளதாகவும் அல் ஜசீரா குறித்த பதிவை நீக்கியுள்ள போதும் இன்னும் 40க்கு அதிகமான இணைய தளங்கள் குறித்த பதிவை அப்படியே வைத்திருப்பதாக சிங்களே அமைப்பின் தேசிய அமைப்பாளர் பிரதீப் சஞ்சீவ  கூறினார்.

அலி சப்ரியின் இந்த செயல் இனவாதத்தை ஊக்குவிக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு தீனி போடுவதாக உள்ளதாக சிங்களே அமைப்பின் தேசிய அமைப்பாளர் பிரதீப் சஞ்சீவ குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கருத்தை தான் அல் ஜசீராவுக்கு வழங்கவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post