IOC எரிபொருள் நிலையங்களை புறக்கணிக்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேண்டுகோள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

IOC எரிபொருள் நிலையங்களை புறக்கணிக்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேண்டுகோள்!

எரிபொருள் விலையினை அதிகரித்ததன் காரணமாக லங்கா இந்தியன் ஒய்ல் கம்பனி ( L IOC) இற்கு சொந்தமான எரிபொருள் நிலையங்களுக்கு செல்ல வேண்டாம் என ஆளும் கட்சியான ஶ்ரீலங்க பொது ஜன பெரமுன தரப்பில் நேற்று செய்திகள் வெளியாகின.

உலகில் எரிபொருளின் விலை குறைவடைந்துள்ள நிலையில் லங்கா இந்தியன் ஒய்ல் கம்பனி ( L IOC) நிறுவனம் எரிபொருளின் விலையினை அதிகரித்தமையினால் எமக்கு வாக்களித்தோர் L IOC எரிபொருள் நிலையங்களுக்கு செல்ல வேண்டாம் என முன்னாள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி பராளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேரா ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

இவ்வாறான தனியார் நிறுவனமான L IOC இனை இலங்கையில் நிருவ வழிவகுத்த ஐக்கிய தேசிய கட்சியே காரணம் எனவும், சிலோன் பெற்றோலிய கூட்டுத்தாபன (Ceypetco) எரிபொருள் நிலையங்களை மாத்திரம் பயன்படுத்துமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.

சிலோன் பெற்றோலிய கூட்டுத்தாபன (Ceypetco) 92 பெற்றோலின் விலை ரூ. 137

லங்கா இந்தியன் ஒய்ல் கம்பனி ( L IOC) 92 பெற்றோலின் விலை ரூ. 142

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.