ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில் வெளியான செய்தி!

ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில் வெளியான செய்தி!

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவது நடைமுறையில் சாத்தியமில்லை என தேர்தல் ஆணைக்குழு உயர்நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

பொதுத் தேர்தல் திகதியை சவாலுக்கு உட்படுத்த தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை இன்று மூன்றாவது நாளாகவும் உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது தேர்தல் ஆணைக்குழு சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இந்த அறிவிப்பை மேற்கொண்டிருந்தார்.

சுகாதார அமைச்சினால் நாட்டில் பொதுத் தேர்தலை நடத்தக் கூடிய சாதகமான சூழல் குறித்து அறிவிக்கும் வரை தேர்தலை நடத்த முடியாது என்று அவர் இதன் போது தெரிவித்திருந்தார்.

குறித்த அறிவிப்பின் பின் மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்ஏ சுமந்திரன் தனது கட்சிக்காரரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால் குறித்த மனு தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்த படாது என நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஏனைய மனுக்கள் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்படும்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post