மொறட்டுவை பகுதியில் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த ஹோட்டல ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம்! (வீடியோ இணைப்பு)

மொறட்டுவை பகுதியில் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த ஹோட்டல ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம்! (வீடியோ இணைப்பு)

மொரட்டுவை,சொய்சாபுர பகுதியில் உள்ள ஹோட்டலில் இன்று (29) அதிகாலை 12:30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு காரில் வந்த குழுவினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதன் பின்னர் அங்கிருந்து தப்பி ஓடும் காட்சி சி.சி.டி.வியில் பதிவாகியிருந்தது.

சம்பவ இடத்தில் சில பொலிஸ் அதிகாரிகளும் ஹோட்டலுக்கு அருகில் இருந்ததாக சி.சி.டி.வி காட்சிகள் தெளிவுபடுத்துகின்றன.

எவருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை, ஆனால் துப்பாக்கிச்சூட்டில் ஹோட்டல் வளாகம் சேதமடைந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் ஹோட்டல் உரிமையாளரை தொடர்பு கொண்டபோது, ஒரு குழு அவரை அச்சுறுத்தியதாகவும் சில வாரங்களுக்கு முன்பு அவரது ஹோட்டல் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதாக தெரிவித்தார்.

பின்பு, இன்று காலை தன்னுடன் தாக்குதல் மேற்கொண்ட நபர் தொலைபேசி வாயிலாகஉரையாடி கொலை அச்சுறுத்தல் விடுத்ததாகவும் மேலும் பொலிஸாரால் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என சவால் விட்டதாகவும் தெரிவித்தார்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post