குரங்குகளிடம் கொரோனா தடுப்புமருந்து சோதனை நம்பிக்கையளிக்கிறது! – Oxford ஆய்வாளர்கள் தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குரங்குகளிடம் கொரோனா தடுப்புமருந்து சோதனை நம்பிக்கையளிக்கிறது! – Oxford ஆய்வாளர்கள் தெரிவிப்பு!

rhesus macaque
கொரோனா வைரஸுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்தொன்று, ஒரு வகை இனத்தைச் சேர்ந்த 6 குரங்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இப்பரிசோதனை பெறுபேறு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானிய Oxford பல்கலைக்கழத்தினால் ChAdOx1 nCoV-19 எனும் மேற்படி தடுப்பு மருந்து இக்குரங்களுக்கு செலுத்தப்பட்டு, கொரோனா வைரஸ் உள்ள சூழலில் குரங்குகள் விடப்பட்டன.

றீசஸ் மகாக் (rhesus macaque) எனும் இனத்தைச் சேர்ந்த 6 குரங்குகளிடமே இவ்வாறு சோதனை நடத்தப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்து செலுத்தப்படாத குரங்குகளைவிட, தடுப்பு மருந்து ஏற்றப்பட்ட குரங்குகளின் நுரையீரல் மற்றும் சுவாசத்தொகுதியில் கொரோனா வைரஸ் குறைவாக இருந்தன என ஆய்வில் தெரியவந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இப்பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் தேசிய சுகாதார நிறுவனம் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வில் பங்குபற்றினர்.

றீசஸ் மகாக் குரங்குகள், மனிதர்களினுடையதைப் போன்ற நோயெதிர்ப்புச் சக்தியைக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வுப் பெறுபேறு இன்னும் ஏனைய விஞ்ஞானிகளால் ஆய்குட்படுத்தப்பட்டு முறைப்படி வெளியிடப்படவில்லை. ஆனால், லண்டன் துப்புரவு மற்றும் வெப்பமண்டல மருத்துவ பாடசாலையைச் சேர்ந்த பேராசிரியர் ஸ்டீபன் இவான்ஸ் தெரிவிக்கையில், இப்பரிசோதனை மிக உயர்தரமானதும் மிக உற்சாகமளிப்பதுமாகும்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரிட்டனில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துக்கு ஊடாக நடத்தப்படும் தடுப்பு மருந்து ஆய்வுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான மனிதத் தொண்டர்கள் பங்குபற்றுகின்றனர்.

https://www.sciencemediacentre.org/expert-reaction-to-preprint-on-the-chadox1-ncov-19-vaccine-and-sars-cov-2-pneumonia-in-rhesus-macaques/



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.