ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் உரிமைக்காக சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் இலங்கை அரசிடம் கோரிக்கை!

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் உரிமைக்காக சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் இலங்கை அரசிடம் கோரிக்கை!

Hejaz Hizbullah
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் இருக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு, சட்டத்தரணிகளை சந்திக்கவும் சட்டத்தரணியாக அவரது தொழில்முறை சலுகைகளை மதிக்குமாறும் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவனம் இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவனத்தின் இணைத் தலைவர்களான மைக்கல் கர்பி மற்றும் ஆன் ராம்பர்க் ஆகியோரின் கையொப்பங்களுடன் நீதித்துறை அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வாவுக்கு எழுத்துப்பூர்வமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தின்படி, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து அவருக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் 2020 ஏப்ரல் 25ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை எனவும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் 7 மற்றும் 9ஆம் பிரிவுகளுக்கு இணங்க 72 மணித்தியாலத்திற்குள் அவர் ஒரு நீதவான் முன் ஆஜர்படுத்தப்படவில்லை.

அதேபோல் அவரை கைது செய்திருப்பது கோவிட் 19 தொற்று நோய் பரவும் சந்தர்ப்பத்தில் எனவும் இலங்கையின் முஸ்லீம் சமூகம் மற்றும் அரசியல் எதிரிகளுக்கு எதிரான பாகுபாடு அதிகரித்து வருவதாகவும் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவனம் இலங்கை அரசுக்கு சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post