இலங்கையர்களுக்கு மாத்திரம் PCR பரிசோதனை மேற்கொள்ளவது சாத்தியம் இல்லை; குவைத் மறுப்பு!

இலங்கையர்களுக்கு மாத்திரம் PCR பரிசோதனை மேற்கொள்ளவது சாத்தியம் இல்லை; குவைத் மறுப்பு!

Ministry of Foreign affairs Kuwait
கோவிட்19 அறிகுறிகளைக் கொண்ட எந்தவொரு இலங்கையர்களையும் இலங்கைக்கு வந்த விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை என குவைத் நாட்டின் வெளியுறவு அமைச்சகம் இலங்கைக்கு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இருந்த போதிலும், அழைத்துவரப்பட்ட இலங்கையர்களுக்கு PCR பரிசோதனைகள் எதுவும் நடத்தப்பட்டிருக்கவில்லை என இலங்கை வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாட்டுக்கு அனுப்பப்படுபவர்களுக்கு PCR பரிசோதனைகளை நடத்துமாறு குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் குவைத் வெளியுறவு அமைச்சகத்திடம் கோரியிருந்தது.

இந்த கோரிக்கையை மறுத்த குவைத் வெளியுறவு அமைச்சகம், COVID19 அறிகுறிகளைக் கொண்ட எந்த பயணிகளும் விமானத்தில் ஏற அனுமதிக்க மாட்டோம் என்றும் குவைத்தை விட்டு வெளியேறிய பிற நாடுகளை சேர்ந்தவர்களுக்கும் PCR பரிசோதனைகள் செய்யப்படவில்லை,ஆதலால் இலங்கையர்களுக்கு மாத்திரம் பரிசோதனை மேற்கொள்ள முடியாது என தெரிவித்ததாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Source: View Here

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post