நாளை நாடு முழுவதும் அமுலுக்கு வரும் ஊரடங்கு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை நாடு முழுவதும் அமுலுக்கு வரும் ஊரடங்கு!!

நாடு முழுவதும் நாளைய (31) தினம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நாளை மறுதினம் முதல் ஜுன் 3ஆம் திகதி வரையில் அனைத்து மாவட்டங்களிலும் இரவு 10 மணி முதல் மறுதினம் அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமுலாக்கப்படும்.

பின்னர் ஜுன் 4ஆம் மற்றும் ஐந்தாம் திகதிகளில் நாடு முழுவதும் முழுநாளும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.

ஜுன் 6ஆம் திகதி முதல் சகல மாவட்டங்களிலும் மீள் அறிவித்தல் வரையில் இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களுக்கும் இடையிலான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.