கட்டுநாயக்க விமான நிலையத்தில் சேவையில் இருந்த இராணுவ சிப்பாய்க்கு கொரோனா!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சேவையில் இருந்த இராணுவ சிப்பாய்க்கு கொரோனா!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பணியில் அமரத்தப்பட்டிருந்த ஹொரன பகுதியை சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்களின் ஊடாக இவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என விமான நிலைய அதிகாரிகளின் அறிக்கை தெரிவிக்கின்றன.

ஹொரன பகுதியில் குறித்த இராணுவ சிப்பாய் விஜயம் மேற்கொண்ட 4 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டதுடன், உரிமையாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

மேலும் இலங்கையில் மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1566 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 775 ஆகும்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post