தனக்கு தானே தீமூட்டி தற்கொலை செய்ய முற்பட்ட வயோதிபர் திருகோணமலை பொது வைத்தியசாலையில்!

தனக்கு தானே தீமூட்டி தற்கொலை செய்ய முற்பட்ட வயோதிபர் திருகோணமலை பொது வைத்தியசாலையில்!

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் தனக்கு தானே தீமூட்டி தற்கொலை செய்ய முற்பட்ட வயோதிபர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (30) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இலிங்கநகர் திருச்செல்வம் வீதியைச் சேர்ந்த மாரிமுத்து வேலாயுதப்பிள்ளை (60 வயது) என்பவரே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தெரியவருகிறது.

குடும்பத்தகராறு காரணமாக கணவர் ஒரு இடத்திலும் மனைவி அவரது உறவினர் வீட்டிலும் வாழ்ந்து வந்த நிலையில் மனைவியை தாக்குவதற்காக சென்றபோது தாக்கமுடியாமல் போயுள்ளது.

இந்த நிலையில் கோபம் கொண்ட இவர் கையில் எடுத்துச் சென்ற மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சித்த நிலையில் மீட்கப்பட்டு நோயாளர்காவு வண்டி மூலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

குறித்த வயோதிபர் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post