கொழும்பில் அனைத்து உணவகங்களையும் திறக்க அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பில் அனைத்து உணவகங்களையும் திறக்க அனுமதி!

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட அதிகார பகுதிகளில் அமைந்துள்ள சுற்றுலா சபையின் அனுமதி பெற்ற விருந்தகங்கள், உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிசாலைகளை நாளை முதல் திறப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபைதெரிவித்துள்ளது.

கடும் சுகாதார நிபந்தனைகளின் கீழ் அவற்றை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் வைத்தியஅதிகாரி ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

சுற்றுலா சபையில் பதிவுசெய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து விருந்தகங்கள் , உணவகங்கள் என்பனவற்றில் அங்கேயேவைத்து உணவுகளை உட்கொள்வதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் , சுகாதார அமைச்சு மற்றும் சுற்றுலா சபை என்பனவற்றினால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை கடுமையாக பின்பற்றுமாறுவிருந்தகங்களின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய , தங்களின் வாடிக்கையாளர்களுக்காக வழமையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆசனங்களின் எண்ணிக்கைக்கு 50 வீதமோஅல்லது அதற்கு குறைவான அளவில் ஆசனங்கள் சமூக இடைவெளியுடன் ஏற்பாடு செய்யப்படல் வேண்டும்.

கைகளை கழுவுதல் மற்றும் தொற்று நீக்குவதற்கான திரவத்தை பயன்படுத்துதல் உள்ளிட்ட கொவிட் -19 தடுப்பு ஒழுங்குவிதிகளுக்குஅமைய இந்த செயற்பாடுகளை முன்னெடுக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு நாளைய தினம் கொழும்பில் ஆறு குழுக்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாககொழும்பு மாநகர சபையின் வைத்திய அதிகாரி ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.