பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பம்!

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் நாளை (26) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான திட்டம் ஒன்றை தயாரிப்பது நாளைய சந்திப்பின் நோக்கம் என கல்வியமைச்சின் கல்வி பிரிவு செயலாளர் நெரஞ்சன் சந்ரசேகர தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து ஆரம்ப திட்டம் ஒன்று தயாரிக்கப்படுவதாகவும் கல்வியமைச்சின் கல்வி பிரிவு செயலாளர் நெரஞ்சன் சந்ரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post