கட்டுநாயக்க துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி !

கட்டுநாயக்க துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி !

கட்டுநாயக்க, மஹகம, ஹீனடியன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 9.30 மணி அளவில் குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது வீதியில் காத்திருந்த இரண்டு பேர் குறித்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதன்போது காயமடைந்த 38 வயதுடைய நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார்.

முன் விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த சந்தேகநபர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post