மண்சரிவு அனர்த்த வலயமாக இரத்தினபுரி மாவட்டம் அறிவிப்பு! - இருவர் பலி!

மண்சரிவு அனர்த்த வலயமாக இரத்தினபுரி மாவட்டம் அறிவிப்பு! - இருவர் பலி!

இரத்தினபுரி மாவட்டத்தில் அயகம, இரத்தினபுரி, எலபாத்த, கலவான, மற்றும் கிரியெல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள் மண்சரிவு அனர்த்த வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இந்த பிரதேசத்தில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

இரத்தினபுரி, வெவல்வத்தை பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 09 வயதான பிள்ளை உயிரிழந்துள்ளதுடன் லெல்லோபிடிய பிரதேசத்தில் கடையொன்றில் மீது மரமொன்று வீழ்ந்தால் 30 வயதான பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு மேலதிகமாக கஹன்கம பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது மண்மேடு ஒன்று இடிந்து விழுந்ததில் பெண்கள் இருவர் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

அதிக மழை காரணமாக பெல்மடுல்ல பிரதேசத்தில் பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் 17 வீடுகளைச் சேர்ந்த 60 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post