கொரோனா தொற்றுக்குள்ளான 96 வயதான பெண் சுகமடைந்து வீடு சென்றார்!

கொரோனா தொற்றுக்குள்ளான 96 வயதான பெண் சுகமடைந்து வீடு சென்றார்!

Old Lady from angoda
கொரோனா தொற்றுக்குள்ளாகி IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று இலங்கையில் அடையாளம் காணப்பட்ட வயது கூடிய தொற்றாளராகக் கருதப்படும் பேருவளையைச் சேர்ந்த 96 வயது மூதாட்டி சுகமடைந்து இன்று (19) வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கொடை தொற்று நோய் சிகிச்சை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே 96 வயதான அந்தப் பெண் இன்று வீடு திரும்பியதாக அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையின் விசேட உடற்கூற்று வைத்திய நிபுணர் தமயந்தி இடம்பிட்டிய தெரிவித்தார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post