
கொரோனா வைரஸ் இல்லாவிட்டால் முடியும் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் புலிகளை நினைவு கூர அனுமதிக்க முடியாது என படையினர் கூறுகின்றனரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
புறக்கோட்டையில் உள்ள பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் அலுவலகத்தில் இன்று (19) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,
கொரோனா இருந்தாலும் இல்லாவிட்டாலும் புலிகளை நினைவு கூர இடமளிக்க முடியாது. அது முதுகெலும்பில்லாத நல்லாட்சி அரசாங்கத்தில் வேண்டுமானால் நடந்திருக்கலாம்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும், மகிந்த ராஜபக்ஷ பிரதமராகவும் இருக்கும் அரசாங்கத்தின் காலத்தில் அதனை நடத்த இடமளிக்க முடியாது.
போரில் உயிரிழந்த உறவினர்களை நினைவுகூர்ந்து சமய வழிபாடுகளை நடத்த எவருக்கும் உரிமை உள்ளது. அதற்கு தடையில்லை. எனினும் பயங்கரவாதிகளை கூட்டாக நினைவுகூர இடமளிக்க முடியாது.
இதன் மூலம் இளம் தலைமுறையினர் பயங்கரவாதத்தை நோக்கி செல்லும் நிலைமை ஏற்படலாம் எனவும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
Source: JaffnaMuslim