மக்களின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி!

மக்களின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி!

மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்பி இருந்தாலும் மக்களின் செயற்பாடுகள் தொடர்பில் திருப்தி அடைய முடியாது எனபிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மக்கள் எந்தளவு அறிவுடையவர்களாக இருப்பினும், நேற்றைய நாளில் அவர்கள் செயற்பட்ட விதம் திருப்தி அடையும் வகையில்இருக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

சமூக இடைவெளியை பேணுவதில் மக்கள் நேற்றைய தினத்தில் முழுமையான அக்கறை காட்டவில்லை எனவும் வாகனபோக்குவரத்தின் போதும் பல பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்றைய தினத்தில் மேற்குறித்த விடயங்களை நடைமுறைப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.

இதற்காக சிவில் உடைகளில் பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post