உலக சுற்றுலா ஆரம்பிக்கப்பட்டதுடன் ஶ்ரீலங்கன் விமான சேவையின் விமான சேவைகள் ஆரம்பம்!

உலக சுற்றுலா ஆரம்பிக்கப்பட்டதுடன் ஶ்ரீலங்கன் விமான சேவையின் விமான சேவைகள் ஆரம்பம்!

உலக பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் திறக்கப்படும் என்ற நோக்கில் நாடுகளுக்கிடையிலேயான பிரயாணத்தடைநீக்கப்பட்டதுடன் ஶ்ரீலங்கன் விமான சேவை லண்டன், டோக்யோ (நரீட்டா), மெல்பர்ன் மற்றும் ஹொங்கொங் ஆகிய நகரங்களுக்கு, சுற்றுலா ஆலோசனைகளுடன் பயணிகளுக்கு சேவையினை வழங்க தீர்மானம் எடுத்துள்ளது.

அதன் அடிப்படையில் பயணிகளுக்கு ஶ்ரீலங்கன் காரியாலம் அல்லது அருகிலுள்ள சுற்றுலா முகவரூடாக விமான டிக்கட்டினை பெற்றுக்கொள்ள முடியும்.

தற்சமயம் அதிகமான நாடுகளில் இருக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கு மீண்டும் தத்தமது நாடுகளுக்கு செல்ல அனுமதிவழங்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மே 13 ஆம் திகதியிலிருந்து ஶ்ரீலங்கன் விமான சேவையானது பயணிகளுக்கு லண்டன் மற்றும் அதற்கு அப்பால்பயணிக்க சேவையினை வழங்கியுள்ளது.

இந்த காலகட்டத்தில் இலங்கையில் ஏற்றுமதியினை வலுப்படுத்தும் நோக்கில் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக ஶ்ரீலங்கன்விமான சேவை 17 விமான சேவைகளை ஆரம்பித்துள்ளது.

மேலும் மாலைத்தீவிலிருந்து வாரமொன்றுக்கு 3 விமானங்களும், சென்னை, ஹொங்கொங், சிங்கப்பூர், லண்டன், தோஹா, துபாய், மெல்பர்ன், பீஜிங், குவென்ஷு (கெண்டன்) மற்றும் ஷெக்ஹாய் நகரங்களுக்கு வாரமொன்றுக்கு இரு விமானங்களையும் சேவையில்ஈடுபடுத்த தீர்மானித்துள்ளது.

மும்பாய், கராச்சி, லாஹோர், டாக்கா, ப்ரென்க்பர்ட், டோக்யோ ஆகிய நகரங்களுக்கு வாரமொன்றில் ஒரு விமான சேவையினைவழங்கவுள்ளது. மேலும் லண்டன், டோக்யோ, மெல்பர்ன் மற்றும் ஹொங்கொங் நகரங்களுக்கு பயணிகள் சேவையும்ஆரம்பமாகவுள்ளது.

இந்த புதிய சேவையின் மூலம் பயணிக்கும் பயணிகள் செல்லும் நாட்டிற்கு உற்பிரவேசிப்பதற்கான அனுமதியும் பெற்றிருக்க வேண்டும்.

மேலதிக விபரங்களுக்கு ஶ்ரீலங்கன் விமான சேவை வாடிக்கையாளர் நிலையத்திற்கு 0197331979 அல்லது சுற்றுலா முகவரினைஅழைக்கவும்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post