டெங்கு அபாய பிரதேச வீடுகளை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

டெங்கு அபாய பிரதேச வீடுகளை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலையுடன் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவுதெரிவித்துள்ளது.

டெங்கு அபாய பிரதேச வீடுகளை பரிசோதனை செய்தல் மற்றும் டெங்கு ஒழிப்பு திட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகஅதன் தலைமை வைத்தியர் அருண ஜயஸேகர தெரிவித்தார்.

கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்த வழங்கும் உதவியினை போன்று டெங்கு ஒழிப்புற்கும் ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் இலங்கையில் 413 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வருடத்தில் கடந்த 04 மாதங்களில் 18,977 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். கடந்த வருடம் இலங்கையில்ஒரு இலட்சத்தி 5,049 நோயாளிகள் இனங்காணப்பட்டனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post