இஸ்ரேலுக்கான சீன தூதர் திடீர் மரணம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இஸ்ரேலுக்கான சீன தூதர் திடீர் மரணம்!

இஸ்ரேலுக்கான சீன தூதர் வடக்கு டெல் ஆவிவ்-ல் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் எனவெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டிற்கான சீன தூதராக இருந்தவர் டு வெய் (வயது 58). கொரோனா பாதிப்புக்கிடையே இவர் கடந்த பிப்ரவரி மாதம்இஸ்ரேலுக்கான சீன தூதராக நியமனம் செய்யப்பட்டார். இதற்கு முன் உக்ரைன் நாட்டின் தூதராக பணியாற்றினார்.

இந்நிலையில் அவர் வீட்டில் இருந்தபோது உயிரிழந்துள்ளார் என்று இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டு வெய்க்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். இவர்கள் இஸ்ரேலில் இல்லை.

இஸ்ரேலுக்கும், சீனாவுக்குமிடையிலான உறவு சிறப்பாகவே உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று விஷயத்தில் சீனா சிலஉண்மைகளை மறைக்கிறது என்று அமெரிக்க செயலாளர் மைக் பாம்பியோ குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு டு வெய் கண்டனம்தெரிவித்திருந்தார். கண்டனம் தெரிவித்திருந்த 2-வது நாளில் டு வெய் உயிரிழந்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.