இனி பஸ்களில் நின்றுக் கொண்டு செல்ல முடியாது - புதிய சட்டம்

இனி பஸ்களில் நின்றுக் கொண்டு செல்ல முடியாது - புதிய சட்டம்

பஸ் வண்டிகளின் ஆசனங்களில் மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்லும் புதிய சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்தஅமரவீர அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்த கொரோனா பரவல் காரணத்தினால் தற்போது இலங்கை போக்குவரத்து சபை பஸ் மற்றும் தனியார் பஸ்களில் ஆசனஎண்ணிக்கையிலேயே பயணிகளை ஏற்றவே அனுமது வழங்கப்பட்டுள்ளது.

பற்றுச்சீட்டினை எடுக்கும் ஒவ்வொருவருக்கும் ஆசனம் வழங்கப்படுவது பயணியின் உரிமை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வளவு காலமாய் கைவிடப்பட்டுருந்த பயணிகளின் உரிமை இனி வரும் காலங்களில் எடுத்து தரப்படும் எனவும் தெரிவித்தார். இதன்அடிப்படையில் பஸ்களில் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் ஆசனம் வழங்கும் சட்டம் அமுலாக்கபடும் எனவும் தெரிவித்தார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post