ஞானசார தேரரின் வேட்புமனு நிராகரித்தமை குறித்து உச்சநீதிமன்றில் மனு!

ஞானசார தேரரின் வேட்புமனு நிராகரித்தமை குறித்து உச்சநீதிமன்றில் மனு!

ஞானசார தேரரின் வேட்புமனு நிராகரித்தமை குறித்து உச்சநீதிமன்றில் மனு!
இன்று (13) ஞானசார தேரர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார், 'அபே ஜன பல பக்ஷய' எனும் கட்சியில் குருநாகல் மாவட்டத்தில் வரும் பொதுத்தேர்தலில் ஞானசார தேரர் தலைமையில் போட்டியிட செய்த வேட்புமனு மாவட்ட தலைமை அதிகாரி ஒருவரால் நிராகரிக்கப்பட்டமை தொடர்பிலேயே மாவட்ட தலைமை அதிகாரி எடுத்த முடிவை மாற்றியமைக்க வேண்டும் என்றே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மேலும் அம்மனுவில் குறித்த அதிகாரிக்கும் 'அபே ஜன பல பக்ஷய' வேட்புமனுவில் இணைக்கப்பட்ட ஒரு வேட்பாளரின் பிரமாணப் பத்திரத்தில் உள்ள பிரச்சினை காரணமாக குறித்த அதிகாரி நிராகரித்தார் என குறிப்பிட்டுள்ளார்.

நடைமுறையில் உள்ள தேர்தல் சட்டங்களின்படி இதுபோன்ற பரிந்துரைகளை நிராகரிக்க மாவட்ட தலைமை அதிகாரிக்கு அதிகாரம் இல்லை என ஞானசார தேரர் அதில் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post