தனது கூந்தலை புற்றுநோயாளிக்கு தானம் செய்த ஹிருணிகா!

தனது கூந்தலை புற்றுநோயாளிக்கு தானம் செய்த ஹிருணிகா!

Hirunika donates her hair to a Cancer Patient
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரா தனது தலைமுடியின் ஒரு பகுதியை பெண்கள் புற்றுநோய் நோயாளிகளுக்கு விக் செய்யும் திட்டத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

“புற்றுநோய் இது ஒரு பயங்கரமாக, கொடூரமான மற்றும் துக்ககரமான அனுபவமாகும், இது நோயாளிக்கு மட்டுமல்ல, அவர்களது அன்புக்குரியவர்களுக்கும் கூட. ஆமாம் .. அவர்களது வலியை எங்களால் அகற்ற முடியாது, ஆனால் குறைந்தபட்சம் ஒரு கணம் அவர்களை மகிழ்விக்க முடியும்.

எனவே என் தலைமுடியை ஒரு புற்றுநோயாளிக்கு தானம் செய்ய முடிவு செய்துள்ளேன், அவர் என்னை விட அதிகம் தேவையுள்ளவர். பெண்களான உங்களை நான் அழைக்கிறேன், நீங்கள் தலைமுடியை துண்டிக்க முடிவு செய்திருந்தால், உங்கள் தலைமுடியை தூக்கி எறிய வேண்டாம் தயவுசெய்து கேன்ஸர் நோயாளிக்கு தானம் செய்யுங்கள் ." என தெரிவித்தார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post