மாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்!

மாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்!

கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து முழு முஸ்லிம் சமூகத்தையே தவறாக எடை போட யாரும் முயற்சிக்கக்கூடாது எனவும் இதில் யாரும் இன வாதக்குளிர் காய முனையக்கூடாது எனவும் தேசிய சமாதானப்பேரவையின் அம்பாரை மாவட்ட சர்வ சமயக்குழுவின் தலைவரும் கல்முனை ஸ்ரீ சுபத்ராராம விகாராதிபதியுமான ரன்முதுகல சங்கரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்துத்தெரிவிக்கையில்,
 கொழும்பு மாளிகாவத்தைபிரதேசத்தில் நேற்று இடம் பெற்ற சம்பவம் துரதிஷ்டவசமானதாகும் இதில் உயிர் நீத்த 3 பெண்களின் குடும்பங்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அதே போன்று இச்சம்பவத்தில் சிக்குண்டு காயப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றவர்கள் மிக சீக்கிரம் குணமடைய வேண்டடும் எனப்பிரார்திக்கின்றோம், இதற்கு எல்லாவற்றிற்கும் மேலாக இந்த சம்பவ்த்துடன் தொடர்புடைய தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த நன்கொடையாளியும் அவரது சகாக்களும் மிக விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் நாம் வேண்டு கோள் விடுக்கின்றோம். எமக்கு கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் இந்த நன்கொடையாளி எப்போதும் ஏழை எளிய மக்களின் நலனில் மிக அக்கரை கொண்டு செயல்படுபவர்.

இவர் எப்போதும் இன மத மற்றும் அரசியல் வேறு பாடு காட்டாமல் மனிதத்தன்மையோடு ஏழை எளிய மக்களுக்கு உதவி புரிந்து வருபவர்.கொரோனா அசச்த்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலனில் அக்காரை கொண்டே பணத்தினை அன்பளிப்பாக வழங்க முன் வந்த வேளையிலேயே நேற்றைய துரதிஷ்டமான சம்பவம் இடம் பெற்றுள்ளது. இதை வைத்து சிலர் இனவாதக்குளிர் காய முயற்சிப்பதை அவதானிக்க முடிகின்றது.எனவே இதில் யாரும் இனவாதக்குளிர்காய முனையக்கூடாது. இந்த விடயத்தை மனிதாபிமானத்தன்மையோடும் திறந்த மனதுடன் பார்க்க வேண்டும் என்பதோடு குறித்த கொடையாளி மிக விரைவில்.விடுதலை செய்யப்படவேண்டும் என அம்பாரை மாவட்ட சர்வ சமயக்குழு வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏ.பி.எம்.அஸ்ஹர் -

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post