ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கோட்டை நீதிமன்றில் புத்தளம் சிறுவர்கள் இருவர் சாட்சியம்!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கோட்டை நீதிமன்றில் புத்தளம் சிறுவர்கள் இருவர் சாட்சியம்!

கோட்டை நீதிவான்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில் ஒரு கட்டமாக இன்று (12)  இரு சிறுவர்கள் கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர்.

குறித்த இரு சிறுவர்களும் விசேட சாட்சியாளர்களாக அங்கு விசாரணையாளர்களால் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் நீதிவானின் உத்தியோகபூர்வ அறையில் வைத்து இரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்கள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட, புத்தளம் – வண்ணாத்துவில்லு , கரைத்தீவு பகுதியின் மத்ரஸாவில் அடிப்படைவாதம் போதிக்கப்பட்டு, ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களை மையப்பபடுத்தியே குறித்த சாட்சியாளர்களான இரு சிறுவர்களும் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post