ஒலிபெருக்கியில் தக்பீர் கூறலாம்; இமாம் முஅத்தின் தவிர்ந்த எவரும் பள்ளிவாயலில் நுழைய அனுமதிக்காதீர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒலிபெருக்கியில் தக்பீர் கூறலாம்; இமாம் முஅத்தின் தவிர்ந்த எவரும் பள்ளிவாயலில் நுழைய அனுமதிக்காதீர்கள்!

பள்ளிவாசல் நிர்வாகிகளே, மத்­ர­ஸா தலைவர்களே இது உங்களின் கவனத்திற்கு
கொவிட் 19 நோய்ப்பரவலை தடுப்பதற்காக இலங்கை வக்ப் சபையினால் பிரப்பிக்கப்பட்டுள்ள பணிப்புரைகள் மாறாமல் அமுலில் உள்ள நிலையில், பின்வரும் அனுமதிகள் தரப்படுகிறன.


  • ஷவ்வால் மாத தலைப்பிறை கண்டதிலிருந்து பள்ளிவாயல் ஒலிபெருக்கி மூலம் தக்பீர் சொல்ல முடியும். இமாம் மற்றும் முஅத்தின் தவிர்ந்த எவரும் பள்ளிவாயலில் நுழைய அனுமதிக்கக் கூடாது. சுற்றுச் சூழலிலுள்ள மக்களுக்கு, குறிப்பாக மாற்று மதத்தவர்களுக்கு தொந்தரவில்லாதவாறு தக்பீர் சொல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.



  • வீட்டிலிருந்தவாறு பெருநாள் தொழுகையை எப்படி தொழுவது என்பது தொடர்பாக விளக்கமளிப்பதற்காகவும் தக்பீரை தொடர்ந்து ஒலி பெருக்கியை பாவிக்க முடியும். சுற்றுச் சூழலிலுள்ள மக்களுக்கு, குறிப்பாக மாற்று மதத்தவர்களுக்கு தொந்தரவில்லாதவாறு இதனை அமைத்துக் கொள்ள வேண்டும்.



  • பள்ளிகளிலோ வேறிடங்களிலோ கூட்டு தொழுகைக்கு அனுமதி இல்லாததன் காரணமாக, தத்தமது குடும்பத்தாருடன் மாத்திரம் தத்தமது வீடுகளில் பெருநாள் தொழுகையை மக்கள் நிறைவேற்றுமாறு வேண்டப்பட வேண்டும்.



  • ஊரடங்கு அமுலில் இருந்தால் மையவாடிகளைத் தரிசிப்பதை தவிர்ந்து கொள்ளுமாறு வேண்டப்படல் வேண்டும். ஊரடங்கு தளர்த்தப்பட்டிருப்பின் சமூக இடைவெளியைப் பேணி முகக் கவசம் (Mask) அணிந்தவாறு கொவிட் 19 விதிமுறைகள் பேணப்பட்டு மையவாடி தரிசிப்பு இடம் பெறலாம். ஆனால் கூட்டம் கூட்டமாக செல்வது தவிர்க்கப்படல் வேண்டும்.


‘அவ்வாறே நிருவாகிகள் இதற்கு அவசியமான பொறிமுறைகளை செயற்படுத்த வேண்டும். அவசியப்பட்டால் தொண்டர்களை அமர்த்துவதோடு நெரிசல் நிலைமை ஏற்படாதவாறு கட்டுப்பாடுகளைப் பிரயோகிக்க வேண்டும்.


  • பொது ஒன்று கூடல்களுக்கு அனுமதி இன்மையால் , நிவாரண உதவிகளை விநியோகிப்பதற்கான ஒன்று கூடல்கள் உப்பட எல்லாவகையான ஒன்றுகூடல்களையும் தவிர்த்துக் கொள்ளுங்கள். நிவாரண உதவினை விதியாகிப்பதற்காக ஒன்று கூடல்கள் தேவையென்றிருந்தால் பொலிஸாருடையதும் பொது சுகாதார அதிகாரியினுடையதும் அனுமதி பெற்றிருப்பதோடு அவர்களது கண்காணிப்பின் கீழேயே இடம்பெற வேண்டும்.


ஏ.பீ.எம்.அஷ்ரப்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் தினைக்கத்தின் மற்றும் இலங்கை வக்ப் சபையின் பணிப்பாளர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.