பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவின் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அவரது மகள்!

பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவின் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அவரது மகள்!

daughter of ajith rohana
கற்றல் நடவடிக்கைக்காக வெளிநாடு சென்று நாடு திரும்பிய தனது மகளை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பாமல் தனது வீட்டில் சுயதனிமைப்படுத்தல் செயற்பாட்டை முன்னெடுக்க அனுமதி வழங்கியதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இவ்வாறு சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாகவும் அந்த செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் அஜித் ரோஹணவின் புதல்வி தெரிவித்துள்ளார்.

தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தான் பெலரூஸ் அரச பல்கலைகழகத்தில் கல்வி கற்பதாகவும் அங்கு மேலும் 400 இலங்கை மாணவர்கள் கல்வி கற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் ஜூன் மாதம் இடம்பெற இருக்கும் இறுதிப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னரே தான் இலங்கைக்கு வருகைதர இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post