பொலிஸ் பாதுகாப்பு சாவடி கட்டளையினை பொருட்படுத்தாது சென்ற நபர் மீது துப்பாக்கி பிரயோகம்

பொலிஸ் பாதுகாப்பு சாவடி கட்டளையினை பொருட்படுத்தாது சென்ற நபர் மீது துப்பாக்கி பிரயோகம்

பாதுகாப்பு படையினரின் கட்டளையினை பொருட்படுத்தாமல் நேற்று (14) இரவு பயணிற்ற நபரினை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து குறித்த நபர் காயமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் பருத்தித்துரை பொலிஸ் சோதனை சாவடியில் வைத்தே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

ஊரடங்கு அமுலில் இருக்கும் சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிசாரின் கட்டளையினை பொருட்படுத்தாது செல்ல முட்பட்ட நேரத்திலேயே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கான 23 வயதுடைய நபர் யாழ், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தார்.

காயமடைந்த நபர் காயமுற்று, வீட்டை நோக்கி செல்லும் போதே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

ஊரடங்கு அமுலில் இருக்கும் போது பாதுகாப்பு சோதனை சாவடி மீது ஒரு மணித்தியாலத்திற்கு முன்பு, கல் வீச்சுக்கள் வந்ததாகவும் யாழ் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post